கோலாலம்பூர், ஜூன் 20 – பேரரசர் சுல்தான் இப்ராஹிம், FFF1 எனும் வாகன பதிவு எண்ணை 17 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் தொகையில் வெற்றிகரமாக ஏலத்தில் வாங்கியுள்ளார்.
மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அந்த ஏலத் தொகை மூலம் கிடைக்கும் வருமானம், மக்களுக்கு பயனை கொண்டு வருமென, தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் வாயிலாக பேரரசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் FF1 என்ற வாகன பதிவு எண்ணை, 12 லட்சம் ரிங்கிட்டுக்கு வாங்கி, தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தார் பேரரசர்.
மலேசியாவில், ஒரு வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச விலையாக அப்போதைக்கு அந்த பதிவு எண் சாதனையை பதிவுச் செய்தது குறிப்பிடத்தக்கது.