
வாஷிங்டன், ஏப்ரல்-16-உலக எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் Hormuz நீரிணையை நிரந்தரமாகத் திறப்பதில் சீனாவுடன் ஓர் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் சீன அதிபர் சீ சின் பிங் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், தனது வழக்கமான பாணியில், “வரும் வாரங்களில் நாங்கள் இருவரும் பெய்ஜிங்கில் சந்திக்கும் போது, சின் பிங் என்னை கட்டி அணைத்துக் கொள்வார்” என நகைச்சுவையாகவும் அதே சமயம் நம்பிக்கையுடனும் தெரிவித்துள்ளார்.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
இந்நிலையில், நீண்டகாலமாக மோதல் களமாக இருந்த இப்பகுதியை, தனது பேச்சுவார்த்தைகள் மூலம் சரிசெய்துள்ளதாக ட்ரம்ப் கூறிக் கொண்டார்.
இதன் மூலம் சீனாவின் எரிசக்தி தேவைகள் உறுதிச் செய்யப்படுவதால், வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே நிலவிய பதற்றம் குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ட்ரம்ப் சொல்வது போல் அந்த “பெரிய கட்டியணைப்பு” நடக்குமா என்பதை விட, இந்த முக்கிய கடல்வழிப் பாதை திறக்கப்படுவதே உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு நிம்மதியைத் தரும் எனக் கூறப்படுகிறது.



