கோலாலம்பூர், ஜூலை 11 – HRD Corp நிறுவனத்தில் லஞ்ச ஊழல் அமசங்கள் இருப்பதாக அரசாங்க பொது கணக்கறிக்கை குழு தெரிவிக்கவில்லை என வழக்கறிஞர் அம்ரிட் பால் சிங் (Amrit Pal Sing ) தெரிவித்தார். எனவே அனைத்து தரப்பினரும் MACC யின் நிபுணத்துவ விசாரணைக்கு வழிவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இப்போதுதான் HRD Corp அலுவலகத்தற்கு MACC வருகை புரிந்துள்ளது.
அந்த நிறுவனத்தில் லஞ்ச அம்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இருந்ததாக அரசாங்க பொது கணக்காய்வு குழு எதனையும் தெரிவிக்காத நிலையில் பல தரப்பினர் பல்வேறு அணுமானங்களை தெரிவிக்கின்றனர். குற்றங்கள் நிருபிக்காதவரை ஒருவரை தண்டிக்கக்கூடாது என்ற கோட்பாட்டை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் தாம் வலியுறுத்த விரும்புவதாக அம்ரிட் பால் சிங் தெரிவித்தார்.
இன்றைய சமூக வலைத்தளத்தில் எல்லைகள் இல்லை என்பதால் அதற்கேற்ப நாம் தண்டிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மூன்று நாட்களுக்கு முன் MACC அதிகாரிகள் என நம்பப்படும் ஐந்து தனிப்பட்ட நபர்கள்
Jalan Beringin னிலுள்ள HRD Corp அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த நிறுவனத்தின் சில ஆவணங்களைt அவர்கள் எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. 2009ஆம் ஆண்டின் MACC சட்டத்திற்கு ஏற்ப குற்ற அம்சங்கள் இருக்கிறதா என்பதை கவனம் செலுத்தும் வகையில் MACC யின் இப்போதைய கவனம் இருப்பதாக கூறப்படுகிறது.