Latestமலேசியா

HRD Corp விவகாரம்: விசாரணை அறிக்கைகளைத் திறந்த ஊழல் தடுப்பு ஆணையம்

புத்ராஜெயா, ஜூலை-7 – மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp மீதான விசாரணைக்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சிறப்புக் குழுவொன்றை அமைத்திருக்கிறது.

2024 தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்ட விஷயங்கள் தொடர்பில், 2009 MACC சட்டத்தின் 18 & 23-வது பிரிவுகளின் கீழ் சில விசாரணை அறிக்கைகளும் திறக்கப்பட்டுள்ளன.

விசாரிக்கப்பட வேண்டிய சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறிய MACC, வரும் செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சுக்கும் (KESUMA), HRD Corp அலுவலகத்திற்கும் விசாரணைக் குழு செல்லவிருப்பதை உறுதிபடுத்தியது.

சம்பந்தபட்டவர்களின் வாக்குமூலங்களும், உரிய ஆவணங்களும் தேவைப்படுவதாக MACC-யின் துணை ஆணையர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் குசாய்ரி யாஹ்யா (Datuk Seri Ahmad Khusairi Yahaya) கூறினார்.

முதலீடுகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் நிதி மேலாண்மை, சொத்து வாங்குதல் போன்ற விவகாரங்களில் விசாரணைக்ழு குழு கவனம் செலுத்துமென்றார் அவர்.

தணிக்கையில் தோல்விக் கண்டிருப்பதால், HRD Corp நிர்வாகத்தினரை உரிய அமுலாக்கத் துறையின் பார்வைக்குக் கொண்டுச் செல்லுமாறு தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் டத்தோ வான் சுராயா வான் மொஹமட் ரட்சி (Datuk Wan Suraya Wan Mohd Radzi) மனிதவள அமைச்சுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இதையடுத்து, MACC-யிடம் புகாரளிக்குமாறு அமைச்சர் ஸ்டீவன் சிம் (Stevan Sim) KESUMA தலைமைச் செயலாளரையும் HRD Corp தலைமை நிர்வாகியையும் உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!