Latestமலேசியா

India Gate உணவகத்தின் 15-ஆவது கிளை IOI Mall Damansara-வில் பிரமாண்ட திறப்பு

டாமான்சாரா, ஜூலை-18 – கண்கவரும் சூழலுக்கும் சுவையான உணவுகளுக்கும் புகழ்பெற்ற India Gate ​உணவகம் IOI Mall Damansara-வில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது.

இது இந்த உணவகச் சங்கிலியின் 15-வது கிளையாகும்.

தற்போது அவர்கள் பிரீமியம் வணிக வளாகங்களுக்குள் தங்கள் கிளைகளை விரிவுபடுத்தி வருகின்றனர்.

இது குறித்து வணக்கம் மலேசியாவிடம் விவரித்தார் India Gate
நிறுவனரும் இயக்குநருமான சரவணன் சுப்பிரமணியம்…

India Gate-டின் உண்மையான இந்திய உணவு முறை தற்போது அனைத்து தரப்பு மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த திறப்பு விழாவை முன்னிட்டு, 800 பிரியாணி பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

அந்த வரவேற்பு மிகவும் அபாரமாக இருந்ததாக சரவணண் குறிப்பிட்டார்.

இதே உற்சாகத்தோடு, இவ்வாண்டுக்குள் One Utama மற்றும் AEON Mall Shah Alam ஆகிய இடங்களில் மேலும் இரண்டு கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக அர் சொன்னார்.

தற்போது India Gate-டின் 15 கிளைகளில் இரண்டிற்கு ஹலால் சான்றிதழ் கிடைத்துள்ளது.

மற்ற அனைத்து கிளைகளுக்கும் விரைவாக ஹலால் சான்றிதழ் பெறுவதற்கான பணிகளை தாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் சரவணன் சொன்னார்.

திறப்பு விழாவில் பங்கேற்ற வாடிக்கையாளர்கள் சிலர் India Gate உணவத்தின் சிறப்பையும் உணவுகளின் தரத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

​India Gate உணவகம் மட்டுமல்ல, அது இனங்களைக் கடந்து மக்களை இணைக்கும் இடமாக மாறியுள்ளது.

உங்கள் அருகிலுள்ள India Gate கிளைக்குச் இன்றே சென்று சுவைத்துப் பாருங்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!