ஜோகூர் பாரு, ஜூன் 25 – ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய பொருட்களை கடந்த மாதம் வைத்திருந்ததாக ஐந்து தனித்தனி குற்றச்சாட்டுகளின் கீழ் கணவன் மற்றும் மனைவி உட்பட மூன்று நபர்கள் மீது ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்து. 35 வயதுடைய முகமட் பிசோல் ஹருன் (Feesol Haron), அவரது மனைவியான 46 வயதுடைய சுஹாய்னி சர்வான்(Suhaini Sarwan, ) 37 வயதுடைய முகமட் பிர்டவுஸ் கமால் இன்ட்ஸ்ஸாம் ( Mohd Firdaus Kamal Intdzam) ஆகிய மூவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி டத்தோ சே வான் ஜைடி சோ வான் இப்ராஹிம் (Che Wan Zaidi Che wan ibrahim ) முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தனர். இந்த குற்றச்சாடு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் அவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
முகமட் பெசோல் மற்றும் சுஹாய்னி ஆகிய இருவரும் தங்களது கை தொலைபேசியில் IS தொடர்பான பொருட்களையும் அவர்களது நடவடிக்கை தொடர்பான அம்சங்களையும் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர். Kempas தொழில்மய பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கடந்த மே மாதம் 30 ஆம் நண்பகல் மணி 1.10க்கும் 1.15க்குமிடையே இக்குற்றங்களை புரிந்ததாக கூறப்பட்டது.
முகமட் பிர்டவுஸ் தாமான் பெர்னியாகாஹான் செத்தியா (Taman Perniagaan Setia) , ஜாலான் பெர்னியாகான் செத்தியா 6 இல் ஒரு தொழிற்சாலை வளாகத்திற்கு முன் மே 30 ஆம்தேதி மாலை மணி 6.15 அலவில் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
அந்த மூவரும் தண்டனைச் சட்டத்தின் 130 ஆவது விதி JB உட்பிரிவு (B) 1(a) இன் கீழ் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 7 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் மற்றும் இந்த குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முடியும்.
சுஹைமி முகநூலில் சுஹைமி சர்வான் ( Suhaimi Sarwan) மற்றும் என்மா கென்மா ( Enma Kenma ) என சமூக வலைத்தளத்தின் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தி IS இயக்கத்திற்கு ஆதரவு வழங்கிய இரண்டு குற்றச்சாட்டுக்களையும் எதிர்நோக்கியுள்ளார். இம்மூவர் மீதான குற்றச்சாட்டு ஜூலை 30 ஆம் தேதி மறுவாசிப்புக்காக செவிமடுக்கப்படும்.