Latestமலேசியா

JB-யில் பாதாள சாக்கடைக் குழியை மோதிக் கவிழ்ந்த பள்ளி வேன்; தமிழ்ப் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் காயம்

ஜோகூர் பாரு, ஜூலை-18- ஜோகூர் பாருவில் இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்ததில் 16 இடைநிலைப் பள்ளி மாணவர்களும், 6 ஆரம்பப் பள்ளி மாணவர்களும் காயமடைந்தனர்.

மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி செல்லும் வழியில் ஜாலான் அப்துல் சமாட் (Jalan Abdul Samad) சாலையில் காலை 7 மணிக்கு வேன் கவிழ்ந்தது.

மூடப்படாமல் இருந்த manhole எனப்படும் பாதாள சாக்கடைக் குழியை வேன் மோதியததே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

காயமடைந்தவர்களில் ஜாலான் யாஹ்யா அவால் (Jalan Yahya Awal) தமிழ்ப் பள்ளி மாணவர்களும் அடங்குவர் என, ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் அஸ்னான் தாமின் (Aznan Tamin) தெரிவித்தார்.

அவர்களுக்கு கைவிரல் மற்றும் கை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.

மாணவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்றும் அவர் நலம் விசாரித்தார்.

அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுமெனக் கூறிய அஸ்னான், வரும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

அந்த வேன் கவிழ்ந்த சம்பவத்தின் வீடியோவும் புகைப்படங்களும் முன்னதாக வைரலாகியிருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!