
கூலிம், ஆகஸ்ட் 12 – சாலை போக்குவரத்து துறை அதிகாரிகளின் சோதனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற 15 வயதுடைய இரு ரோஹிங்கியா சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மதியம் 1.50 மணியளவில் செர்டாங்–செலாமா சாலையில் இந்தச் சம்பவம் நடந்தது. அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றபோது, இருவரும் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற பின்னர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இருவரும் செம்பனைத் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளை சிறுவன் ஓட்டியது, வாகன உரிமம் (LKM) காலாவதியானது, செல்லுபடியாகும் காப்பீடு இல்லாதது உள்ளிட்ட பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
மோட்டார் சைக்கிள் மேல் நடவடிக்கைக்காக பறிமுதல் செய்யப்பட்டது.



