Latestமலேசியா

KKB மக்களுக்குப் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்- புதிய சட்மன்ற உறுப்பினர் உறுதி

குவாலா குபு பாரு, மே-12 – குவாலா குபு பாருவின் புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுப் பெற்றுள்ள Pang Sock Tao, தொகுதி மக்களுக்குப் பாரபட்சமின்றி சேவையாற்றப் போவதாக உறுதியளித்துள்ளார்.

கட்சி பேதமின்றி மக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யப் பாடுபடுவதே தனது தலையாயப் பணி.

அதே சமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற Lee Kee Hiong விட்டுச் சென்ற மக்கள் பணிகளையும் தாம் தொடரப் போவதாக அவர் சொன்னார்.

குறிப்பாக, KKB பட்டணத்தை மேம்படுத்துவதிலும் அங்கு அடிப்படை வசதிகளைச் செய்துத் தருவதிலும் தமது முழு கவனம் இருக்கும் என, தனது வெற்றிக் குறித்து கருத்துரைத்த போது Pang Sock Tao அவ்வாறு கூறினார்.

தொகுதி மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்ற ஏதுவாக, அங்கேயே குடியேறுவதற்கு அவர் வீடு பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பக்காத்தான் ஹராப்பான் சார்பில் KKB-யில் களமிறங்கிய Pang, நேற்றைய இடைத்தேர்தலில் 14,000 வாக்குகளைப் பெற்று, பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் உள்ளிட்ட மூவரைத் தோற்கடித்தார்.

இதையடுத்து கடந்தாண்டு மாநிலத் தேர்தலில் KKB-யில் பெற்ற வெற்றியை PH தக்க வைத்துக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!