Latestமலேசியா

KL ஃபேஷன் வீக்கில் அறிமுகமான பானசோனிக்கின் புதிய ஹேர் கேர் சாதனங்கள்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 6 – பானசோனிக் பியூட்டி நிறுவனம், தனது புதிய பிரீமியம் nanocare Hair Dryer (EH-NB70) மற்றும் nanocare Hair Straightener (EH-HN30) ஆகியவற்றை கோலாலம்பூர் ஃபேஷன் வீக் (KLFW) 2026 நிகழ்ச்சியில் உலகளவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது.

மலேசிய ஆடை வடிவமைப்பாளர் மின் லூனாவின் ஃபேஷன் ஷோவின் போது அறிமுகமான இந்த இரண்டு புதிய தயாரிப்புகளும், தலைமுடியை அழகுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஹேர் டிரையர், தலைமுடியுடன் சேர்த்து தலையின் தோலையும் ஈரப்பதத்துடன் பராமரிக்க உதவுவதால், தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும் என பானசோனிக் கூறியுள்ளது. அதேபோல், புதிய ஹேர் ஸ்ட்ரெய்ட்னர், தலைமுடியின் இயற்கை ஈரப்பதத்தை பாதுகாத்தபடி நேராக்கவோ அல்லது மென்மையான சுருட்டல்களாக மாற்றவோ உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பானசோனிக் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் கெய்சுகே நிஷிடா கூறுகையில், நவீன தொழில்நுட்பத்தையும் அன்றாட பயன்பாட்டையும் இணைக்கும் தரமான தயாரிப்புகளை மலேசிய நுகர்வோருக்கு வழங்குவதே நிறுவனத்தின் நோக்கம் என்றார். தலைமுடி ஆரோக்கியமாக இருந்தால்தான் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ற புதுமையான தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு தயாரிப்புகளும் வரும் செப்டம்பர் மாத தொடக்கம் முதல் நாடு முழுவதும் உள்ள பானசோனிக் விற்பனை நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையவழி விற்பனை தளங்களில் கிடைக்கும். ஹேர் டிரையரின் விலை RM1,399, ஹேர் ஸ்ட்ரெய்ட்னரின் விலை RM699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!