
கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – கோலாலம்பூர் ஜலான் கெரிஞ்சியிலுள்ள (Jalan Kerinchi) KL Gateway Mall-ல் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் BMW கார் முற்றிலும் எரிந்து நாசமானது. அருகிலிருந்த Perodua Axia கார் 30 விழுக்காடு சேதமடைந்தது.
இரவு, கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பந்தாய் (Pantai) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர்.
சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்கள் தீப்பற்றியிருந்ததைக் கண்டறிந்து, தீயை விரைந்து கட்டுப்படுத்தி முழுமையாக அணைத்தனர்.
இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



