கோலாலம்பூர், ஜன 2 – கே.எல்.சி.சி (KLCC) எல்.ஆர்.டி (LRT ) நிலையத்தில் இன்று மாலை மணி 4.15 அளவில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து அந்த வழித்தடத்திற்கான ரயில் சேவை தடைப்பட்டது.
கட்டுப்பாட்டு நிலையத்திற்கு மாலை மணி 4.15 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக மாநகர் தீ மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கமாண்டர் முகமட் அஸ்மின் முகமட் ஸஹிடி (Mohamed Azimin Bin Mohamed Zahidi) தலைமையில் ஏழு தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்துச் சேர்ந்தனர்.
எனினும் அதற்குள் கே.எல்.சி.சி அவச மீட்புக் குழுவினர் கார்பன் டை ஆக்சைடு கருவியை பயன்படுத்தி தீயை முழுமையாக அனைத்தனர். கே.எல்.சி.சி (KLCC) எல்.ஆ…