Latestமலேசியா

KLIA, அம்பாங்கில் RM17.8 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்: 6 வெளிநாட்டினர் உட்பட 7 பேர் கைது

KLIA, அம்பாங்கில் RM17.8 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்: 6 வெளிநாட்டினர் உட்பட 7 பேர் கைது

ஷா ஆலாம், மே 18 – சிலாங்கூர் போலீசார் KLIA மற்றும் அம்பாங் பகுதிகளில் நடத்திய தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கஞ்சா (ganja) மற்றும்ஷாபு (syabu) போன்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 3 பெண்கள் உட்பட 6 வெளிநாட்டினரும், ஒரு உள்ளூர் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 6, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் KLIA-வில் scan பரிசோதனையின் போது சந்தேகத்திற்கிடமான பயணப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சோதனையில் மொத்தம் 172.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், அதன் மதிப்பு 13.85 மில்லியன் ரிங்கிட் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் போதைப்பொருட்களை ஐரோப்பாவிற்கு கடத்த முயன்றதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையில், மே 11 அன்று அம்பாங் பகுதியில் வாகனத்தில் இருந்த உள்ளூர் ஆண் ஒருவரிடமிருந்து 79 கிலோ ஷாபு (syabu) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு 3.95 மில்லியன் ரிங்கிட் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து சந்தேக நபர்களும் தற்போது 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!