
செப்பாங், அக்டோபர்-1,KLIA-வில் தம்மோடு தொடர்புடையதாக இணையத்தில் பரவி வரும் சர்ச்சை வீடியோ குறித்து, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் (AKPS) தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஜைன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நள்ளிரவில் செய்தியாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், ஷுஹைலியைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் மற்றொரு நபரிடம் ஆக்ரோஷமாகப் பேசி, அவரது தலையைப் பிடித்து முரட்டுத்தனமாக நடப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
அதே வேளையில், தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட நபர் அளித்ததாகக் கூறப்படும் புகாரின் நகலும் பரவி வருகிறது.
எனினும் அதன் உண்மைத்தன்மைக் குறித்து இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.



