புத்ராஜெயா, ஜூலை-13 – தான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் KLIA அருகே விபத்துக்குள்ளாகி, கொள்கலன் லாரி டையரில் உடல் சிக்கி 80 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டதில், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நெஞ்சை பதபதைக்க வைக்கும் அச்சம்பவம் நேற்று பிற்பகல் வாக்கில் சுல்தான் அப்துல் சமாட் மசூதிக்கு அருகேயுள்ள roundabout வளைவில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை, டையருக்கடியில் சிக்கி படுகாயமடைந்த பெண்ணைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தது.
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த பெண்ணுக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
25, 39 வயதுடைய இருவரும் உடனடியாக சைபர்ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.