புத்ராஜெயா, ஏப்ரல் 26 – KLIA விமான நிலையச் சரக்குக் கிடங்கில் ‘வெடிகுண்டு மிரட்டல்‘ என்ற வாசகத்துடன் வந்த பொட்டலமொன்றால் நேற்று பிற்பகலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சரவாக், Limbangகில் உள்ள ஒருவரது முகவரியிடப்பட்ட அப்பொட்டலத்தை, scan இயந்திரப் பணியாளர் கண்டு அதிர்ந்து போனார்.
பேட்டரி மற்றும் சில வையர்கள் இருந்ததாக நம்பப்பட்ட அப்பொட்டலத்தின் வெளியே, ‘எச்சரிக்கை, இதை வீசினால் வெடித்து விடும், இது ஒரு வெடிகுண்டு‘ என எழுதப்பட்டிருந்ததே அவரின் அதிர்ச்சிக்குக் காரணம்.
இதையடுத்து, உடனடி பாதுகாப்பு நடவடிக்கையாக, வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் போலீஸ் பிரிவு களத்தில் இறங்கியது.
ரோபோட்டில் பொருத்தப்பட்ட ‘pigstick’ மூலமாக சுடப்பட்டதில் அப்பொட்டலம் வெடிக்கவில்லை.
பிறகு திறந்துப் பார்த்ததில், அதனுள் வெறும் மடிக்கணினியும் கைப்பேசியை charge செய்யும் கேபள் மட்டுமே இருந்தாக போலீஸ் கூறியது.
முன்னதாக மோப்ப நாய்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும், அது வெடிப்பொருள் அல்ல என்பது உறுதியானது.
இருந்தாலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததன் பேரில், பொட்டலத்தை அனுப்பியவர் மீது குற்றவியல் சட்டத்தின் 506-வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக KLIA போலீசார் கூறினர்.