Latestமலேசியா

KLIA விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய சந்தேகப் பேர்வழி கைது

கோலாலம்பூர் , ஏப் 15 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் பயணிகள் வந்தடையும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 36 மணி நேரத்திற்குப் பின் கிளந்தான், கோத்தா பாருவைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகப் பேர்வழி Husain Hafizul Harawi கைது செய்யப்பட்டான் . இன்று நண்பகல் 1 மணியளவில் கோத்தா பாரு நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றபோது அந்த சந்தேகப் நபர் கைது செய்யப்பட்டான். கோத்தா பாரு மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் அந்த ஆடவன் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ Razarudin Husain தெரிவித்தார். இது தொடர்பாக புக்கிட் அமான், குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் அல்லது கிளந்தான் போலீஸ் தலைவர் விரைவில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதிகாலை மணி 1.20 அளவில் ஆடவன் ஒருவன் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் அவற்றில் ஒரு சூடு அங்கிருந்த பாதுகாவர் மீது பாய்ந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியது. அந்த ஆடவனின் இலக்கிற்கு உள்ளான பெண் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அந்த சந்தேகப் பேர்வழி மற்றும் அவனது மனைவிக்கிடையே இருந்த தனிப்பட்ட தகராறே அந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு காரணம் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!