Latestமலேசியா

KLIA Southern Support Zone Sepang Aircraft Engineering கிடங்கில் இரசாயண கசிவு

செப்பாங், ஜூலை-4, KLIA-வில் உள்ள Southern Support Zone Sepang Aircraft Engineering விமான பராமரிப்புக் கிடங்கில் இன்று காலை இராசயண கசிவு ஏற்பட்டது.

MERS 999 என்ற அவசர அழைப்பு எண் வாயிலாக தங்களுக்கு அது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.

இதையடுத்து KLIA தீயணைப்பு மீட்புத் துறை மற்றும் ஷா ஆலாம் தீயணைப்பு மீட்புத் துறையின் 6 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.

அங்கு ஏற்பட்ட இரசாயண கசிவு குறித்து சோதனையில் இறங்கிய அக்குழுவினர், பாதுகாப்புக் கருதி அருகிலிருந்த தொழிலாளர்களை வெளியேற்றினர்.

இரசாயண வாயுவை நுகர்ந்ததால் தலைசுற்றலுக்கும் குமட்டலுக்கும் ஆளான 20 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இராசயணக் கசிவுக்கான காரணம் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!