Latestமலேசியா

KTMB ரயில் ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் பீதி

கோலாலம்பூர், அக்-30-KTMB ரயிலில் பயணம் செய்தபோது ஜன்னல் கண்ணாடி திடீரென உடைந்து சிதறியதில், பயணி ஒருவர் கண்ணாடித் துண்டுகள் தலையில் பட்டு மயக்க உணர்வுக்கு ஆளானார்.

பெர்லிஸில், Arauவில் இருந்து பினாங்கின் பட்டர்வொர்த் நோக்கிச் சென்ற ரயிலில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக @Alyaanblh என்ற பயனர், ‘Threads’ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். கண்ணாடித் துண்டுகள் தலையில் பட்டதால் தாம் சோர்வாகவும் மயக்கமாகவும் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சம்பவத்தில் மேலும் சில பயணிகளும் பாதிக்கப்பட்டது சமூக ஊடகப் பதிவுகளின் கருத்துப் பகுதியில் காணப்பட்ட பதிவேற்றங்களின் வாயிலாகத் தெரிய வந்துள்ளது. கண்ணாடி உடைந்த இருக்கைகளில் அமர்ந்திருந்த தாமும் நண்பரும் திடீரெனக் கேட்ட பலத்த சத்தத்தால் அதிர்ச்சியடைந்ததாக @Ayamgoreng என்ற பயனர் தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக தங்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இசை கேட்டுக் கொண்டிருந்தபோது கண்ணாடி உடைந்து சிதறியதில் அதன் துண்டுகள் முகத்திலும் கைகளிலும் பட்டதாக @Cuna என்ற மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் அமர்ந்திருந்த மற்ற பயணிகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

@Arif என்ற பயனர், Arauவுக்கும் Kodiangங்கிற்கும் அராவுக்கும் இடைப்பட்ட பகுதியில் யாரோ கல் வீசியதால் கண்ணாடி உடைந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளார். கண்ணாடி உடைந்ததற்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!