கோலாலம்பூர், ஜூலை-17 – LRT3 இலகு ரயில் சேவைத் திட்ட கட்டுமானத்திற்கு வழி விடும் வகையில், PLUS மற்றும் SPRINT நெடுஞ்சாலைகளில் நாளை, ஜூலை-18-ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை போக்குவரத்து கட்டங்கட்டமாக மூடப்படும் அல்லது திருப்பி விடப்படும்.
திங்கள் முதல் சனி வரை இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை அங்கு போக்குவரத்து மூடப்படும்.
LRT3 கட்டுமானத்தின் முதன்மைக் குத்தகை நிறுவனமான Setia Utama LRT 3 Sdn Bhd அறிக்கையொன்றில் அதனைத் தெரிவித்தது.
SPRINT நெடுஞ்சாலையில், Petronas NGV எதிர்புறம் டாமான்சாரா நோக்கிச் செல்லும் Jalan Kayu Ara சாலை கட்டங்கட்டமாக மூடப்படும்.
அதே சமயம், PLUS நெடுஞ்சாலையில் டாமான்சாராவிலிருந்து SPRINT மற்றும் Jalan Kayu Ara நோக்கிச் செல்லும் பாதை, அங்குள்ள Hardware கடை தொடங்கி பெட்ரோனாசுக்கு எதிர்புறமுள்ள சாலை வரை அட்டவணைக்கேற்ப மூடப்படும்.
சாலையின் ஆக இடப்பக்க பாதையோ, நடுப்பாதையோ அல்லது ஆக வலப்புற பாதையோ… எதுவாக இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பாதைத்தான் மூடப்படும்.
இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்த LRT கட்டுமானக் குத்தகை நிறுவனம், பாதைத் திருப்பி விடப்படுவது தொடர்பான அறிவிப்புப் பலகைகளைப் பின்பற்றி நடக்குமாறு வாகனமோட்டிகளைக் கேட்டுக் கொண்டது.
இந்த LRT3 ரயில் சேவைத் திட்டம் சிலாங்கூர், பண்டார் உத்தாமாவில் தொடங்கி ஜோஹான் செத்தியாவில் முடிவடையும்.