Latestமலேசியா

MACC தலைவர் அசாம் பாக்கி மீது தொடரும் குற்றச்சாட்டுகள் – விசாரணை மற்றும் போராட்டம் வெடித்தது

கோலாலம்பூர், பிப்ரவரி -27 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர் அசாம் பாக்கி மீது நிறுவன பங்குகள் வைத்திருந்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவரது பெயர் இன்னும் நிறுவன பங்குதாரர் பதிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 2024 அரசு சுற்றறிக்கைப்படி, அரசு ஊழியர்கள் நிறுவனங்களில் வைத்திருக்கும் பங்குகள் 5 விழுக்காடு அல்லது 100,000 ரிங்கிட் மதிப்பை மீறக்கூடாது.

ஆனால், பங்குகள் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டதையும், பரிவர்த்தனை அறிவிக்கப்பட்டதையும் அசாம் பாக்கி தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் சட்டத்துறை தலைமை அதிகாரி டுசூக்கி மொக்தார் (Dusuki Mokhtar) தலைமையில் சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இதேவேளை, புளூம்பெர்க் செய்தி குறித்து போலீசார் குற்றப்பத்திரிகை அவதூறு விசாரணை நடத்துகின்றனர்.

சில MACC அதிகாரிகள் “கார்ப்பரேட் மாஃபியா”வில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை MACC மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டு நாட்டின் பொருளாதார பாதுகாப்பை பாதிக்கக்கூடும் என முன்னாள் நீதிபதி எச்சரித்தார்.

இந்நிலையில், அசாமுக்கு எதிராக இரண்டாவது போராட்டம் நடைபெற்றுள்ளது. முதல் போராட்டத்தில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!