மலேசியா

MACCயின் முதல் இந்திய ஆணையராக டத்தோ கருணாநிதி வரலாறு படைத்தார்

புத்ராஜெயா, ஏப்ரல்-18,

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யில், டத்தோ எஸ். கருணாநிதி, JUSA C பதவியிலிருந்து JUSA B, அதாவது ஆணையராக பதவி உயர்வுப் பெற்றுள்ளார்.

இதன் மூலம், இந்த நிலையை அடைந்த முதல் இந்திய அதிகாரி என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.

கருணாநிதி, தற்போது மலேசிய ஊழல் தடுப்பு அகாடமியின் மூத்த இயக்குநராக பொறுப்பேற்கிறார்.

MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அறிக்கையொன்றில் இதனைக் கூறினார்.

இதுநாள் வரை கருணாநிதி, பினாங்கு MACC இயக்குநராக பணியாற்றினார்.

இவ்வேளையில், இதே அறிவிப்பில், டத்தோ Mohd Hafaz Nazar, MACC விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் முன்பு ஊழல் தடுப்பு அகாடமியின் மூத்த இயக்குநராக இருந்தார்.

இந்த நியமனங்களும் பதவி உயர்வுகளும் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளன.

இந்த பதவி உயர்வுகள், கருணாநிதி மற்றும் Hafaz-சின் திறமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன என அசாம் பாக்கி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!