Latestமலேசியா

MAHB பங்குகள், வெளிநாட்டு நிறுவனங்களிடம் விற்கப்படவில்லை ; பிரதமர் விளக்கம்

கோலாலம்பூர், ஜூன் 25 – MAHB – மலேசியா ஏர்போட் ஹோல்டிங் பங்குகள், சில தரப்பினர் குற்றம்சாட்டி வருவதை போல, வெளிநாட்டு நிறுவனங்களிடம் விற்கப்படவில்லை.

மாறாக, MAHB-யில், கசானா நேஷனல் நிறுவனமும், EPF – ஊழியர் சேம நிதி வாரியமும் வைத்திருக்கும் 41 விழுக்காட்டு பங்குகள் 70 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தினார்.

MAHB-யின் எஞ்சிய 30 விழுக்காட்டு பங்குகள், GIP மற்றும் அபு டாபி இன்வெஸ்ட்மெண்ட் வசம் இருப்பதை, நிதி அமைச்சருமான அன்வார் சுட்டிக்காட்டினார்.

மலேசிய விமான நிலையங்களை விற்கும் ஒப்பந்தம் எதையும் அரசாங்கம் செய்யவில்லை. MAHB என்பது மலேசிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் ஒரு நிறுவனமாகும். அதனால், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

MAHB பங்குகள் விற்பனை தொடர்பில், மக்களவை கூட்டத்தில் இன்று முன் வைக்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!