Latestமலேசியா

MIPPக்கு பெரிக்காதான் நேஷனலில் முக்கிய பதவிகள்; இந்தியச் சமூகத்திற்கான அங்கீகாரம் – புனிதன் வருணிப்பு

கோலாலாம்பூர், மார்ச்-15-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதியத் தலைமையின் கீழ் அதன் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

MIPP தலைவர் எஸ்.பி. புனிதன், பெரிக்காத்தான் துணைத் தலைவர்களில் ஒருவராகவும், தேசிய ஒருமைப்பாட்டுப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம், டத்தோ சிவகுமார் கிருஷ்ணன், PN துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தவிர பெரிக்காத்தான் உச்சமன்றத்தில் மேலுமொரு MIPP பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார்; இதையடுத்து MIPP சார்பில் உச்சமன்ற உறுப்பினர்களாக உள்ளோரின் எண்ணிக்கை 4 பேராக உயர்ந்துள்ளது.

இந்நியமனங்கள், இந்தியச் சமூகத்திற்கும் MIPP-க்கும் வழங்கப்பட்ட முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுவதாகக் குறிப்பிட்ட புனிதன், அதற்காக கூட்டணியின் புதியத் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சுரி மொக்தாருக்கு நன்றித் தெரிவித்தார்.

நம்பிக்கைக்குப் பாத்திரமாக MIPP, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும், அனைத்து மலேசியர்களின் நலன்களையும் முன்னிறுத்தவும் தொடர்ந்து செயல்படுமென்றும் அவர் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!