
மலேசிய மணவாழ்க்கை மற்றும் குடும்ப அமைப்பை வலுப்படுத்தும் இயக்கமான ‘MY Family’-யின் 15-ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பன்முக உளவியல் ஆலோசனை, சிகிச்சை மற்றும் பயிற்சி மையத்தை நிறுவுவதற்காக கலைநிகழ்ச்சியுடன் கூடிய சிறப்பு நிதி திரட்டும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று சிலாங்கூர், பத்து மலையில் அமைந்துள்ள Shenga Convention Hall-லில் நடைபெற்ற இந்நிகழ்வை ம.இ.கா-வின் தேசியத் துணைத் தலைவரும், தப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டத்தோ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மலேசிய இந்திய விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவரும், முன்னாள் செனட்டருமான டத்தோ T.Mohan சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்வேளையில் இந்நிகழ்ச்சியில் வேல்ஸ் (VELS) பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அதன் அமைப்பாளருமான தமிழகத்தின் டாக்டர் ஐசரி கணேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்வில் அவருக்கு ‘மனிதநேயச் செம்மல்’ விருதும் வழங்கப்பட்டது.
இதனிடையே, இந்தியச் சமுதாயத்தில் நிலவும் மனநலப் பிரச்சனைகள் மற்றும் குடும்பச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் Medan Batu Cave பகுதியில் புதிய மையம் அமையவுள்ளது.
அம்மையத்தை அமைப்பதற்குத் தேவையான நிதி திரட்டும் முயற்சியில் இதுவரை சுமார் RM50,000 திரட்டப்பட்டுள்ளது. மேலும் RM80,000 நிதி தேவைப்படுவதாக MY Family அமைப்பின் தலைவர் திரு. பாரிராஜன் குணபதி கூறினார்.
இவ்வேளையில், இச்சேவைக்கு உதவ விரும்பும் நல்நெஞ்சங்கள் நிதி உதவி வழங்கி ஆதரளிக்குமாறு இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் K.A Gunah கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் சமுதாயம் சார்ந்த பணிகளை ஆற்றி வரும் 11 ஆளுமைகளுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.



