Latestமலேசியா

NPE நெடுஞ்சாலையில் தடம்புரண்டு தீப்பிடித்த கார்; ஓட்டுநர் பலி, நண்பர் காயம்

கோலாலம்பூர், அக்டோபர்-20, பந்தாய் டாலாம் நோக்கிச் செல்லும் NPE நெடுஞ்சாலையின் 14.9-வது கிலோ மீட்டரில் இன்று காலை கார் தடம்புரண்டு தீப்பற்றிக் கொண்டதில், காரோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காலை 8 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் உடனிருந்த நண்பர் சிராய்ப்புக் காயங்களுடன் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவ்விரு ஆடவர்களும் பயணித்த Toyota Vios கார் முழுவதுமாக எரிந்துபோனது.

தீயை அணைக்கும் பணிகள் காலை 9.40 மணி வாக்கில் நிறைவடைந்தன.

மரணமடைந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!