பெட்டாலிங் ஜெயா, ஜூன்-19 – பெட்டாலிங் ஜெயா Paradigma Mall-லில் உள்ள உணவங்காடி நிலையத்தில் (food court ) நேற்று மதியம் திடீரென தீ ஏற்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
வாடிக்கையாளர்கள் பதறியடித்து ஓடுவது வைரலான 25 வினாடி வீடியோவில் தெரிந்தது.
அங்கிருந்த பணியாளர்கள் தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை வேகமாக அணைத்தனர்.
நல்ல வேளையாக எவருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.
அங்கு சிறிய அளவிலான தீ பரவியை அப்பேரங்காடி நிர்வாகமும் உறுதிபடுத்தியது.
தீ அணைக்கப்பட்டு, உடனடியாக பாதுகாப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு, அவ்வுணவங்காடி நிலையம் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியதாக Paradigm Mall கூறியது.