Latestமலேசியா

PERKESOவின் Festival Mega iLINDUNGu 2026 மீண்டும் வருகிறது

கோலாலம்பூர், செப்-17-கோலாலம்பூர் வட்டார மக்களையும் வேலை வழங்குநர்களையும் இலக்காகக் கொண்டு, PERKESOவின் இவ்வாண்டுக்கான மாபெரும் சமூகப் பாதுகாப்புத் திருவிழா ‘Festival Mega iLINDUNGu’ எதிர்வரும் செப்டம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரை கோத்தா டாமான்சாராவில் உள்ள Strand Mallலில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் வேலை வழங்குநர்கள் தங்களது ஊழியர்களுக்கான தாமதமான பங்களிப்புகளுக்கான அபராதக் கட்டணத்தில் 80 விழுக்காடு வரை தள்ளுபடி பெறுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், Lindung 24 Jam திட்டத்திலிருந்து விலகிய பங்களிப்பாளர்கள் மீண்டும் அத்திட்டத்தில் இணைய சிறப்பு முகப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

‘Kasuma Bersama Rakyat’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இத்திருவிழாவிற்கு மனிதவள அமைச்சர் மாண்புமிகு டாக்டர் ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சிறப்பு வருகை புரிந்து, விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவிருக்கிறார். அதோடு அவர் PERKESOவின் புதிய சின்னத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளார்.

MITRA, HRD Corp மற்றும் TalentCorp உள்ளிட்ட KESUMAவின் கீழ் செயல்படும் 10 அமைப்புகளின் பங்கேற்புடன் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. வேலை தேடுவோர் 2,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களைக் கொண்ட Lindung Kerjaya வேலை வாய்ப்புப் பெருவிழவையும் பார்வையிடலாம்.

மேலும், இலவச சுகாதாரப் பரிசோதனை, தலைக்கவச விநியோகம், பிரபலங்களின் சமையல் நிகழ்ச்சி, ஸும்பா நடனம் மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன. முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் அதிர்ஷ்டக் குலுக்கலிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். கூடுதல் தகவல்களுக்கு PERKESOவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை வலம் வரலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!