Latestமலேசியா

PJD நெடுஞ்சாலை திட்ட தொடர்பு தொடரப்படாது – ஃபாமி

புத்ரா ஜெயா, ஏப் 17 – Projek  pembinaan  lebuh Raya Petaling Jaya  அல்லது  Traffic   Dispersal  Elevated Highway   எனப்படும் நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தின்  ஒப்பந்த நிறுவனம் 11 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியதால்  அந்த திட்டம் தொடரப்படாது.  ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான  Fahmi Fadzil இதனை தெரிவித்தார்.  நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இதற்கு முன் இரண்டு முறை  நீடிப்புக்காக   அந்த நிறுவனம் விண்ணப்பித்ததால், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்  கூறினார். 

நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய PJD இணைப்பு  நிறுவனம் நீட்டிப்புக்கு விண்ணப்பித்துள்ளது, ஆனால் இது நிராகரிக்கப்பட்டதோடு  திட்டத்தை  மேலும் தொடர முடியாது. முன்வைக்கப்பட்ட பல நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதன் விளைவாக, திட்டம் தொடரப்படவில்லை.  இது குறித்து பொதுப்பணி அமைச்சு மேலும் விரிவான  அறிக்கையை வெளியிடும் என்றும் Fahmi  கூறினார்.  சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் தேவைகளைப் பூர்த்தி செய்யாததால், நெடுஞ்சாலை அமைப்பதற்கான விண்ணப்பத்தை ரத்து செய்ய  கடந்த ஆண்டு   ஜூலை மாதம் சிலாங்கூர் மாநில அரசு முடிவு செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!