
குவாலா சிலாங்கூர், பிப்ரவரி-15 – பி.கே.ஆர் கட்சியின் இரு உயர் மட்ட பதவிகளுக்கானத் தேர்தல் குறித்து முடிவெடுப்பதை கட்சியிடமே விட்டு விடுவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
“கட்சி ஜனநாயகத்தை மதிப்பவன் என்ற வகையில் அவ்விஷயத்தில் நான் தலையிடவில்லை; போட்டி வேண்டுமா வேண்டாமா என்பதை கட்சியே முடிவு செய்யட்டும்” என்றார் அவர்.
வரும் கட்சித் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் போட்டியிடப்படாது என, பி.கே.ஆர் கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் Datuk Seri Shamsul Iskandar Md Akin முன்னதாகக் கோடி காட்டியிருந்தார்.
தற்போது அன்வார் தலைவராகவும், பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி துணைத் தலைவராகவும் உள்ளனர்.
பி.கே.ஆர் கட்சியின் மத்திய செயலவை உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கான தேர்தல் மே 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.