
கோலாலம்பூர், ஜூன் 22 – தேசிய சேவைப் பயிற்சித் திட்டமான PLKN 3.0-இல் இதுவரை மொத்தம் 3,404 இளைஞர்கள் பங்கேற்றுள்ளதாக தற்காப்பு துணையமைச்சர் அட்லி ஜஹாரி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டுக்கான பயிற்சியில் 1202 பேர் பங்கேற்ற வேளை, இவ்வாண்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 2202 அதிகமாகும்:
இத்திட்டம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டுப்பற்று, ஒழுக்கம், தலைமைத்துவத் திறன் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் PLKN 3.0 தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.
இதுவரை நடைபெற்ற பயிற்சி தொடர்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்துள்ளதாகவும், திட்டத்தின் செயல்திறன் குறித்து பங்கேற்பாளர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
PLKN 3.0 திட்டம் தற்போது பல இராணுவ முகாம்களில் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் மேலும் பல பயிற்சி மையங்களைச் செயல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அட்லி குறிப்பிட்டார்.



