Latestமலேசியா

109 ஆண்டு காலக் காத்திருப்பு நிறைவு: தம்புன், சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

தம்புன், ஜூன்-22-பேராக், தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 109 ஆண்டுகாலமாகத் தனியார் நிறுவனத்தின் கீழ் இருந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலம், தற்போது முறைப்படி LPS எனப்படும் பள்ளி மேலாளர் வாரியத்தின் பெயருக்கு மாற்றப்பட்டு, அதற்கான நிலப்பட்டா அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் தம்புன் தொகுதி சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் தலைமையில் மேற்கொண்ட தொடர் முயற்சியால் இந்த வரலாற்றுச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

இந்த நிலப்பட்டா அங்கீகாரத்தின் மூலம், பள்ளி நிர்வாகம் இனி கல்வி வளர்ச்சிக்குத் தேவையான புதிய கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என, LPS தலைவர் சேகர் ராமையா மகிழ்வோடு தெரிவித்தார்.

தனி நிலப்பட்டா கிடைத்திருப்பது குறித்து நிம்மதித் தெரிவித்த தலைமையாசிரியர் மகாராணி சுப்ரமணியம், இப்பள்ளிக்கு மாணவர்கள் விளையாடுவதற்கான நில ஒதுக்கீடும் பெற்றுத்தரப்பட்டுள்ள தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

48 மாணவர்கள், 11 ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளியில், அடுத்தாண்டு முதலாம் வகுப்பில் படிக்க என்றுமில்லாத அளவுக்கு 17 மாணவர்கள் பதிந்துகொள்ளதாகவும் அவர் சொன்னார்.

இவ்வேளையில், இந்த நிலப்பட்டாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார் டத்தோ ஆர். சுரேஷ்குமார்…

பேராக்கில் உள்ள மற்ற தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளும் தங்களின் நில உரிமைகளைப் பெற இத்தகைய கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுரேஸ்குமார் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே இவ்வட்டாரத்தில் ஐந்து தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.

அவைகள் சங்காட் கிண்டிங், சிம்மோர் தோட்டம் , கிளேபாங் தோட்டம் மற்றும் சத்தியசீலா ஆகிய பள்ளிகள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் இருந்து வந்துள்ளன.

அதில் சத்திய சீலா தோட்டம் கிளேபாங் மற்றும் சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவைகள் எல் .பி் எஸ் . கீழ் பதிவாகி நிலபட்டா பெற்றுள்ளது.

அடுத்து சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் தனி நிலபட்டா கிடைப்பதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!