
கோலாலம்பூர், அக்.06 – இவ்வாண்டு ஆகஸ்ட் 31 நிலவரப்படி, தேசிய உயர்கல்வி நிதிக் கழகமான PTPTNனிடம் இருந்து கடன் வாங்கியவர்களில் 1.16 மில்லியன் பேர் இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றனர். அவர்கள் செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை 10.7 பில்லியன் ரிங்கிட் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
தேவைப்படுவோருக்கு உதவிகள் சரியாகச் சென்றடைவதை உறுதிச் செய்ய, PTPTN-இன் நிதி ஆற்றலுக்கு உட்பட்டு கடன் நிர்வாகத்தை வலுப்படுத்த உதவும் விதிமுறைகளைச் சீரமைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கட்டாய அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் அரசு, பெரு நிறுவன உத்திசார் ஒத்துழைப்புகள் மூலம் கடனைத் திரும்பப் பெறும் முயற்சிகளை மேலும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு விளக்கியது.
இதனிடையே, கடன் பெற்றவர்கள் தங்களது நிதி நிலைக்கு ஏற்ப திருப்பிச் செலுத்தும் முறையை மறுசீரமைக்கவோ அல்லது அனுமதிக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மையின் அடிப்படையில் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கவோ PTPTN-ஐ அணுகலாம் என அமைச்சு கூறியது.



