Latestஉலகம்

PUBG விளையாட்டில் அறிமுகமான காதலனைச் சந்திக்க பாலி சென்ற 17 வயது சிறுமி!

இந்தோனேசியா, அக்டோபர் 22 – இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா (Jawa Barat) பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, PUBG விளையாட்டின் மூலம் அறிமுகமான காதலனைச் சந்திப்பதற்காக 900 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து பாலிக்குச் சென்றுள்ளார்.

அந்தச் சிறுமி, 17 வயதான IKWA என்பவருடன் இணையம் வழியாகக் காதல் உறவில் இருந்துள்ளார். காதலனைச் சந்திக்க விரும்பிய அவர், பெக்காசி (Bekasi) பகுதியிலிருந்து கராங்காசெம் (Karangasem) பகுதிக்குச் சென்றுள்ளார்.

டென்பசார் (Denpasar) நகரிலுள்ள உபுங் பேருந்து முனையத்தில் சிறுமியை அழைத்துச் சென்ற காதலன், தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். சிறுமி வயதுக்குக் குறைந்தவர் என்பதால் கவலையடைந்த காதலனின் குடும்பத்தினர், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

விசாரணையின்போது, வேலை தேடுவதற்காக பாலிக்கு வந்ததாகவும், காதலனின் வீட்டில் தற்காலிகமாகத் தங்கத் திட்டமிட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். அவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே அங்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் சிறுமியை உள்ளூர் பொது அமைதி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!