
கோலாலம்பூர், ஆகஸ்ட்-1-கோலாலம்பூர், கியூ சென்ட்ரல் (Q Sentral) கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த 32 வயது இளைஞர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் கயிறுகள் மற்றும் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி அந்த இளைஞரைக் காப்பாற்ற முயற்சித்தனர்.
இருப்பினும், அவர் 33-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து, கே.எல் சென்ட்ரலை இணைக்கும் கீழ் தளக் கூரையின் மீது விழுந்தார்.
வேலைவாய்ப்பு நிறுவனமொன்றில் பணிபுரியும் அந்த இளைஞருக்குக் கை, கால் மற்றும் இடது விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுத் தற்போது சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலையில் ஏற்பட்ட அதிகப்படியான மனஅழுத்தமே இதற்குக் காரணம் என, தொடக்கக் கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனஅழுத்தம் மற்றும் தனிமை உணர்வால் தவிப்பவர்கள் உதவிக்கு Befrienders போன்ற அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



