Latestமலேசியா

‘Pocket Rocketman’ அசிசுல் ஹஸ்னியின் 16 ஆண்டுகால கனவு நனவானது; கடைசி காமன்வெல்த் தொடரில் தங்கம் வென்றார்

கிளாஸ்கோவ், ஆகஸ்ட்-1-2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் கைநழுவிய தங்கப் பதக்கத்திற்குப் பிறகு, 16 ஆண்டுகள் கழித்து மலேசியாவின் உள்ளரங்கு சைக்கிளோட்டப் புயல் டத்தோ அசிசுல் ஹஸ்னி அவாங் தனது கனவுத் தங்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

​கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான Keirin இறுதிப் போட்டியில், ‘The Pocket Rocketman’ என அன்போடு அழைக்கப்படும் 38 வயதான அசிசுல், தனது அபார யுக்தியால் முந்திச் சென்றார்.

கடைசி சுற்றில் ஆஸ்திரேலியாவின் Leigh Hoffman-மனை முந்திக்கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

Hoffman வெள்ளியும், இங்கிலாந்தின் Harry Ledingham-Horn வெண்கலமும் வென்றனர்

தனது கடைசி காமன்வெல்த் தொடரில், 16 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற மகிழ்ச்சியில் அசிசுல் ஹஸ்னி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

2010 போட்டியில் தொழில்நுட்பத் தவறால் தங்கம் பறிக்கப்பட்டு, 2014-ல் வெண்கலம் வென்றவர் அசிசுல்.

இந்நிலையில், மலேசிய விளையாட்டு உலகின் இணையற்ற நாயகனாக வலம் வரும் இவருக்கு, இந்த கிளாஸ்கோ தங்கப் பதக்கம் ஒரு பொன்னான பிரியாவிடையாக அமைகிறது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!