
கோத்தா பாரு, மே 28 – Pasukan Gerakan Am போலீசார் கோத்தா பாரு கோக் லானாஸ் (Kok Lanas) பகுதியில் 32 வயது ஆடவரைக் கைது செய்து, 756,000 ரிங்கிட் மதிப்பிலான “மஷ்ரூம்” வகை போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
மே 18 ஆம் தேதி நடந்த ரகசிய கண்காணிப்பில், சந்தேகநபர் மோட்டார் சைக்கிளுடன் சாலையோரத்தில் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து திரவ வடிவிலான போதைப்பொருள் இருந்த ஐந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அவர் காட்டிய வீட்டில் மேலும் 50.4 லிட்டர் போதைப்பொருளும் ஒரு கைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தமாக 762,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



