
அலோர் ஸ்டார், ஜூன்-17-24 வயதுடைய தனியார் உயர்கல்வி கூட மாணவன் ஒருவன், தாய்லாந்திலிருந்து 1.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14.63 கிலோ கஞ்சா போதைப்பொருளை மலேசியாவுக்குக் கடத்த முயன்றபோது, புக்கிட் காயு ஹித்தாம் எல்லைச் சோதனை மையத்தில் கைது செய்யப்பட்டான்.
விசாரணையில், அவன் கடத்தல் கும்பலுக்காக செயல்பட்டு, இதற்கு முன்பு நான்கு முறை போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.
ஒவ்வொரு முறையும் 4,000 ரிங்கிட் கூலி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சுமார் 73,000 பேருக்கு விநியோகிக்கக்கூடிய அளவு என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



