Latestமலேசியா

RM1 வெள்ளி நூடுல்ஸ்: “இவ்வளவு சிறிய அளவுக்கு RM1-ஆ?” – இணையத்தில் கடும் விமர்சனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – 1 ரிங்கிட்டுக்கு, விற்பனை செய்யப்பட்ட மிகச் சிறிய அளவிலான நூடுல்ஸ் பாக்கெட் தொடர்பான பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இதன் விலை 20 சென் மட்டுமே இருக்க வேண்டும்,” என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மற்றொருவர், “எனது 3 வயது குழந்தையால் கூட இதை ஒரே வாயில் சாப்பிட்டு முடித்துவிட முடியும்,” எனக் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இதைச் சாப்பிட்டால் ஒரு எறும்புக்குக் கூட வயிறு நிறையாது,” என மற்றொரு வலைத்தளவாசி விமர்சித்துள்ளார். இதனிடையே, நூடுல்ஸ் நன்றாக விற்பனையானால், விற்பனையாளர் ஆண்டுக்கு இருமுறை உம்ரா செல்லும் அளவுக்கு வருமானம் கிடைக்கும் என மற்றொருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!