Latestமலேசியா

RM50,000 நிதி கையாடல்; சிலாங்கூர் கோயில் முன்னாள் தலைவர் கைது

ஷா ஆலாம், ஏப்ரல்-5-சிலாங்கூரில் உள்ள ஒரு கோயிலில் 50,000 ரிங்கிட் நிதியைக் கையாடல் செய்தப் புகாரில், அதன் முன்னாள் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைதுச் செய்துள்ளது.

வாக்குமூலம் அளிப்பதற்காக ஏப்ரல் 2-ஆம் தேதி சிலாங்கூர் MACC தலைமையகம் சென்றபோது, 70 வயது அவ்வாடவர் கைதானார்.

கோயில் பழுதுபார்ப்புப் பணிகள் எனக் கூறி, இன்னொருவருடன் கூட்டுசேர்ந்து 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் , 50,000 ரிங்கிட்டுக்கு அவர் போலி கோரிக்கையை அனுப்பியுள்ளார்.

“ஆனால், அப்படி எதுவுமே நடைபெறவில்லை; பழுதுபார்ப்பு என்ற பெயரில் ஆலய நிர்வாகத்தை ஏமாற்றி இருவரும் பணத்தை மோசடி செய்துள்ளனர்”, என MACC வட்டாரம் கூறியது.

கூட்டுக் களவாணியான அவரின் நண்பர் மார்ச் மாதாமே கைதாகி விட்டார்.

இவ்வேளையில், ஆலயத்தின் பதிவு, ROS எனப்படும் சங்கப் பதிவிலாகாவால் 2024 அக்டோபர் மாதம் இரத்துச் செய்யப்பட்டதும், கோயில் அனுமதியின்றி அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பதிவு இரத்தானதால், கோவில் நிதி நிர்வாகத்தையும் செலவுகளையும் அதிகாரத் தரப்பு கண்காணிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. இதுவே, பொது மக்கள் உள்ளிட்டோரின் நன்கொடையால் பெறப்பட்ட கோயில் நிதி முறைகேட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பொறுப்பில் இருந்தவர்களாலேயே நிதி கையாடல் செய்யப்பட்டதால், வழிபாடுகள் உட்பட ஆலயத்தின் அன்றாட நடவடிக்கைகள் பணமின்றி பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் விரைவில் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பபடுவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!