Latestமலேசியா

RTS Link திட்டத்தை அங்கீகரித்தை மகாதீர் மறந்து விட்டார் போலும், அந்தோனி லோக் சாடல்

ஜியோர்ஜ்டவுன், ஜூன்-11 – ஜொகூர் பாரு – சிங்கப்பூர் இடையில் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் RTS Link விரைவு ரயில் திட்டம் குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டுக்கு பிரத்தியேகமாக விளக்கமளிக்க, போக்குவரத்து அமைச்சு தயாராக இருக்கிறது.

அத்திட்டம் குறித்து தான் அவ்வளவாக எதுவும் கேள்விப்படவில்லை என அப்பெருந்தலைவர் கூறிக் கொண்டிருப்பதை அடுத்து, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அவ்வாறு சொன்னார்.

உண்மையில் அத்திட்டத்தை அங்கீகரித்ததே மகாதீர் தான்; ஏழாவது பிரதமராக இருந்த போது 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி அது குறித்து செய்தியாளர் சந்திப்பையும் அவர் நடத்தியுள்ளார்.

அப்போதும் தாம் தான் போக்குவரத்து அமைச்சர்; ஜொகூர் பாருவில் நடைபெற்ற அச்செய்தியாளர் சந்திப்பில் தானும் பங்கேற்றிருந்ததை அந்தோனி லோக் சுட்டிக் காட்டினார்.

Bukit Chagar-ரில் இருந்து Woodlands வரையிலான RTS இணைப்புத் திட்டத்தை அரசாங்கம் தொடருவதாக பத்திரிகைகளில் படங்களோடு அச்செய்தி வெளியானதை, மகாதீர் ஒருவேளை மறந்திருப்பார் போலும் என அமைச்சர் சொன்னார்.

நேற்று தனது X தளத்தில் RTS Link திட்டம் குறித்து கிண்டல் தோரணையில் பதிவிட்டிருந்த மகாதீர், மலேசிய அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எல்லாம் அத்திட்டம் மேற்கொள்ளப்பட வாய்ப்பு இல்லையெனக் கூறியிருந்தார்.

RTS Link திட்டமானது, ஜொகூர் பாருவின் Bukit Chagar, சிங்கப்பூரின் Woodlands North என 2 நிலையங்களை உட்படுத்திய 4 கிலோ மீட்டர் தூர விரைவு ரயில் சேவையாகும்.

அத்திட்டம் நிறைவுப் பெற்றதும், Bukit Chagar-ருக்கும் Woodlans-சுக்கும் இடையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் பயணம் மேற்கொள்ள முடியும்.

10 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அத்திட்டம் 2027, ஜனவரி 1-ம் தேதி முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!