
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-27 – STPM தேர்வில் 3.5 CGPA புள்ளிகள் பெற்ற இந்திய மாணவர்களுக்கு, அவர்களது UPU விண்ணப்பத்தின் முதல் தேர்வுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
செனட்டர் Dr. லிங்கேஷ்வரன், கல்வி அமைச்சிடம்
அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனை சிறப்புச் சலுகையாகக் கேட்கவில்லை; மாறாக சம பங்கு மற்றும் தகுதி அடிப்படையில் கேட்கிறோம் என, மேலவையில் 13வது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு பேசினார்.
அவர்களின் எண்ணிக்கை ஒன்றும் அவ்வளது பெரிதல்ல; ஆனால் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு படித்து சிறந்தத் தேர்சியைப் பதிவுச் செய்துள்ளனர்.
தங்களின் முதல் தேர்வுக் கிடைக்கா விட்டால், அவர்கள் நிச்சயம் மனமுடைந்து போவர்.
அதோடு, சிறந்த அடைநிலை நியாயத்திற்கான உத்தரவாதம் அல்ல என்ற ஒரு தவறான செய்தியை அது உணர்த்தி விடுமென லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டினார்.
எனவே, மிகச் சிறந்தத் தேர்ச்சியப் பெறும் சிறும்பான்மையின மாணவர்களுக்கும், மேற்படிப்பில் சமமான வாய்ப்பு வழங்கப்படுவதை கல்வி அமைச்சு வாயிலாக அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
அப்போது தான், 13-ஆவது மலேசியத் திட்டம் உண்மையிலேயே அனைத்து மலேசியர்களுக்குமானது என்பது நிரூபணமாகும் என்றார் அவர்.