Latestமலேசியா

Syed Saddiq விடுவிக்கப்பட்ட முடிவை நிலை நிறுத்தியது கூட்டரசு நீதிமன்றம்

புத்ராஜெயா, ஜூலை.13 – மூன்றாண்டு காலமாக மூவார் சட்டமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahman எதிர்நோக்கி வந்த சட்டப் போராட்டம் ஒருவழியாக இன்று முடிவுக்கு வந்தது. ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதை கூட்டரசு நீதிமன்றம் பிளவுபட்ட தீர்ப்பில் உறுதி செய்ததே அதற்குக் காராணம். வழக்குத் தரப்பின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த பெரும்பான்மை நீதிபதிகள், Syed Saddiq மீதான குற்றச்சாட்டுகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என குறிப்பிட்டனர். மேலும் மேல்முறையீட்டுத் தலையீட்டிற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் அவர்கள் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் Ruzima Ghazaliயும் Collin Lawrence Sequerahவும் பெரும்பான்மை தரப்பில் இருந்த நிலையில், நீதிபதி Abu Bakar Jais மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த மேல்முறையீட்டை விசாரித்தது. Rafiq Hakim Razali பெர்சத்து இளைஞர் பிரிவின் உதவிப் பொருளாளராக இருந்த போது 1 மில்லியன் ரிங்கிட் நிதிப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி நம்பிக்கை மோசடியில் ஈடுபட உடந்தையாக இருந்ததாக Syed Saddiq மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், அர்மாடா பூமி பெர்சத்து எண்டர்பிரைசஸின் மேபேங்க் இஸ்லாமிக் பெர்ஹாட் கணக்கிலிருந்து Rafiqக்கை அந்தப் பணத்தை அப்புறப்படுத்தச் செய்து, RM120,000 நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்கியிருந்தார்.

33 வயதான இளைஞர், விளையாட்டுத்துறையின் அந்த முன்னாள் அமைச்சர் மீது, சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த வருமானம் என நம்பப்படும் தலா RM50,000 தொகையை, 2018 ஜூன் 16 மற்றும் 19, 2018 ஆகிய தேதிகளில், அவரது மேபேங்க் இஸ்லாமியக் கணக்கிலிருந்து ஜோகூர் பாருவின் Taman Perlingங்கில் உள்ள ஒரு வங்கியில் இருக்கும் அவரது அமானா சஹாம் பூமிபுத்ரா கணக்கிற்கு மாற்றியது தொடர்பான இரண்டு பணமோசடி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. நான்கு குற்றச்சாட்டுகளில் Syed Saddiq குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாக அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!