Latestமலேசியா

சரவா முன்னாள் ஆளுநர் தொடர்பில் விசாரணை கிடையாது; அசாம் பாகி தகவல்

கோலாலம்பூர், பிப் 29 – சரவாக்கின் முன்னாள் ஆளுநரும் , முன்னான் முதலமைச்சருமான காலஞ்சென்ற அப்துல் டைப் மஹ்முட் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகள் குறித்து மேல் விசாரணை எதுவும் இனி நடத்தப்படாது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைவர் அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார். டைப் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. எனவே அவர் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து இனி எந்தவொரு விசாரணையும் இல்லையென இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தபோது அசாம் பாக்கி கூறினார். டைப் சொத்துக்களை உடனடியாக முடக்கும்படி சுவிற்சர்லாந்துதை தளமாக கொண்டு செயல்படும் அரசு சார்பற்ற இயக்கமான Bruno Manser நிதியகம் கேட்டுக்கொண்டது.

இதனிடையே முன்னாள் நிதியமைச்சர் Daim Zainuddin-னுக்கு எதிராக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அசாம் பாக்கி தெரிவித்தார். வெளிநாட்டில் வசிப்பவர்கள் உட்பட மேலும் அதிகமானோரிடம் நாங்கள் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியிருப்பதாக அவர் கூறினார். தனக்கு சொந்தமான 38 நிறுவனங்கள் , சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பஹாங், கெடா மற்றும் கோலாலம்பூரில் 19 நிலங்கள், ஆறு சொத்துக்கள், எழு வாகனங்கள் மற்றும் இரண்டு வங்கிக் கணக்குகள் உட்பட சொத்துக்களின் விவரங்களை பிரகடனப்படுத்திய குற்றச்சாட்டுக்களை Daim எதிர்நோக்கியுள்ளார். சொத்துக்களின் விவரங்களை வெளியிடத் தவறியதாக டைய்மின் மனைவி Naimah Khalid மீது ஜனவரி 23ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது. மற்றொரு நிலவரத்தில் முன்னாள் பிரதமர் முஹிடின் யாசினின் மருமகன் எங்கிருக்கிறார் என்ற விவரத்தை MACC இன்னும் கண்டறியவில்லை. அவரது இருப்பிடத்தை கண்டுப்பிடிப்பதற்காக அனைத்துலக அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்புகொண்டு வருகிறோம் என்றும் Azam Baki தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!