Latestமலேசியா

புதிய பாஸ்போர்ட், MyKad வடிவமைப்பு படங்கள் போலியானவை – உள்துறை அமைச்சு

புத்ராஜெயா, ஜனவரி 14 – சமூக ஊடகங்களில் பரவி வரும் புதிய பாஸ்போர்ட் மற்றும் MyKad வடிவமைப்பு படங்கள் பொய்யானவை என உள்துறை அமைச்சான KDN அறிவித்துள்ளது. அவை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடுகள் அல்ல என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய பாஸ்போர்ட் மற்றும் MyKad தொடர்பான உண்மையான தகவல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ ஊடக வழிகளின் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 8ஆம் தேதி, இந்த ஆண்டில் புதிய பாஸ்போர்ட் மற்றும் MyKad அறிமுகம் செய்யப்படும் திட்டம் குறித்து உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொதுமக்கள் சரியான மற்றும் நம்பகமான தகவல்களுக்காக KDN, குடியேற்றத் துறை மற்றும் தேசிய பதிவுத்துறையான JPN ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டும் சரிப்பார்க்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!