
மனாமா (பஹ்ரேய்ன்), பிப்ரவரி-21 – தசை மற்றும் எலும்பு வலிக்காக வெளிநாட்டில் பாரம்பரிய சிகிச்சையை முடித்துக் கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
பஹ்ரேய்ன் நாட்டுக்கு மேற்கொண்ட அலுவல் பயணத்தின் போது மாமன்னரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை உறுதிப்படுத்தினார்.
சிகிச்சைக்கு முன்பிருந்ததை விட தற்போது சுல்தான் இப்ராஹிம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அன்வார் சொன்னார்.
மேற்கொண்டு சிகிச்சைகளைப் பெறும் முன் மாமன்னர் முதலில் நாடு திரும்ப முடிவுச் செய்துள்ளார்.
தேவைப்பட்டால் அவர் சிகிச்சைகளைத் தொடருவார் என டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
வெளிநாட்டு சிகிச்சைக்காக பிப்ரவரி 7-ஆம் தேதி கிளம்பிய சுல்தான் இப்ராஹிம், வெற்றிகரமாக சிகிச்சைகளை முடித்திருப்பதாகவும், இன்று தாயகம் திரும்பவிருப்பதாகவும் இஸ்தானா நெகாரா முன்னதாக அறிவித்திருந்தது.