Latestஉலகம்

மிக்கி மவுஸின் பதிப்புரிமையை இழந்தது டிஸ்னி

லாஸ் எஞ்சல்ஸ், ஜனவரி 5 – டிஸ்னியின் பிரசித்தி பெற்ற அனிமேஷன் கதாபாத்திரமான மிக்கி மவுஸின் (Mickey Mouse) பதிப்புரிமை கடந்தாண்டுடன் காலாவதியாகியுள்ளது.

அதனால், இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி, அதனை யார் வேண்டுமானாலும், எதற்காகவும் பயன்படுத்தலாம்.

அமெரிக்க சட்டத்திற்கு உட்பட்ட, ஆரம்பகால மிக்கி மவுஸின் பதிப்புரிமை 95 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது.

1928-ஆம் ஆண்டு, முதல் முறையாக வெளியான குறும் “கார்ட்டூன்” வாயிலாக அந்த உலக பிரசித்திப் பெற்ற கதாப்பாத்திரம் வாழ்க்கையைத் தொடங்கியது.

படைப்பாளரும், தொழிலதிபருமான வால்ட் டிஸ்னியால் (Walt Disney) உருவாக்கப்பட்ட மிக்கி மவுஸ், அந்த கோடி கணக்கான டாலர் முத்திரையின் நீடித்த சின்னம் அல்லது அடையாளம் ஆகும்.

கடந்த 90 ஆண்டுகளில், உலகெங்கிலும் பல டிஸ்னி பூங்காக்கள் தோன்றியுள்ள வேளை ; உலகின் புகழ்பெற்ற பாத்திரமாக மாறியுள்ள மிக்கி மவுஸ், ஆடைகள், வீட்டுப் பொருட்கள், உணவு வகைகள் என அனைத்திலும் இடம் பெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், வீடியோ கேம்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மிக்கி மவுஸ் கதாபாத்திரம் தோன்றியுள்ளது அல்லது நடித்துள்ளது.

எனினும், அந்த கதாபாத்திரத்தின் ஆரம்பகால பதிப்புரிமை மட்டுமே காலாவதியாகியுள்ளது. அதன் நவீன பதிப்பு, இன்னமும் அமெரிக்க பதிப்புரிமை சட்டத்தின் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!