
கோலாலம்பூர், ஜனவரி-19, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற Sports Toto 4D லாட்டரி குலுக்கலின் 121 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை, 4 அதிர்ஷ்டசாலிகள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மலேசிய வரலாற்றிலேயே ஆக உயரிய பரிசுத் தொகைக்கான அந்த Supreme Jackpot வெல்லப்பட்ட தகவலை, Sports Toto Malaysia மகிழ்ச்சியுடன் அறிவித்தது.
அவர்களில் மூவர் ஆளுக்கு 35 மில்லியன் ரிங்கிட்டை வென்ற வேளை, இன்னொருவர் சுமார் 17 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார்.
அனைவருக்கும் வாழ்த்துகள் என facebook-கில் சுருக்கமாக வெளியிட்ட அறிக்கையில் அந்த லாட்டரி நிறுவனம் கூறியது.
Jackpot குலுக்கல் வரலாற்றில் இதற்கு முந்தைய ஆக உயரியப் பரிசுத் தொகை, 2022-ல் பதிவான 97.75 மில்லியன் ரிங்கிட்டாகும்.
இந்த 121 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை வெல்லும் தங்களின் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க, ஏராளமான மக்கள் முன்னதாக Sports Toto கடைகளுக்குப் படையெடுத்தனர்.
சாலைகளில் மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து அவர்கள் லாட்டரி டிக்கெட் வாங்கிய வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.