Latestமலேசியா

கட்டுப்பாட்டை இழந்த MPV வாகனம் கவிழ்ந்து லோரி மோதியது – இளைஞர் பலி

கோலாலம்பூர், நவ 23 – மலேசிய பெர்லீஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகே பௌ புத்ரா வளாகத்திற்கு அருகே சாங்லுன்-குலா பெர்லிஸ் சாலையில் MPV வாகனம் ஒன்று ஒரு லோரியுடன் மோதியதால் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்ததோடு மற்றொருவர் காயம் அடைந்தார். டொயோட்டா அவான்சா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழந்த பின்னர் லோரியின் பின்புறப் பகுதியில் மோதியது. அந்த வாகனத்தின் இருக்கையில் சிக்கிக்கொண்டதால் தீயணைப்பு மீட்பு படை உறுப்பினர்களின் உதவியோடு இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் கங்காரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் இறந்ததாக தீயணைப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!