Latestஉலகம்

மனைவிக்கு மரணம் ஏற்படுத்தியதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் சைக்கிளோட்ட சாம்பியன் மீது குற்றச்சாட்டு

சிட்னி, ஜன 1 – ஒலிம்பிக் வீராங்கனையும் தனது மனைவியுமான மெலிசா ஹாப்கின்சிற்கு மரணம் ஏற்படுத்தியதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் உலக சைக்கிளோட்ட சாம்பியன் ரோஹன் டென்னிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ரோஹன் டென்னிஸ் தமது காரினால் மனைவியை மோதியதாக கூறப்பட்டது. ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற சைக்கிளோட்ட வீராங்கனையான மெலிசா ஹாப்கின்ஸ் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்து கலந்துகொண்டவர் ஆவார். சனிக்கிழமையன்று மாலையில் கடுமையான காயத்திற்குள்ளாளதை தொடர்ந்து அவர் மரணம் அடைந்தார்.

அவரது கணவரான 33 வயதுடைய டென்னிஸ் தொழில் ரீதியிலான சைக்கிளோட்ட வீரராவார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலக சைக்கிளோட்ட போட்டியில் வெற்றி பெற்ற அவர் 2015ஆம் ஆண்டு “Tour de France” போட்டியிலும் வெற்றி பெற்றார். அபாயகரமாக காரை செலுத்தி மரணம் விளைவித்தது, கவனக் குறைவுடன் காரோடியது மற்றும் உயிருக்கு மிரட்டல் ஏற்படுத்தும் வகையில் காரோட்டியதாக டென்னிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக தென் ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!